< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; நவோமி ஒசாகா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; நவோமி ஒசாகா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
27 May 2024 9:07 AM IST

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமொ ஒசாகா இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஒசாகா ஆட்டத்தின் 2வது செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட ஒசாகா 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லூசியா ப்ரோன்செட்டியை வீழ்த்தினார்.

இறுதியில் நவோமி ஒசாகா 6-1, 4-6, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லூசியா ப்ரோன்செட்டியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்