< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்
|31 May 2024 7:12 AM IST
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார்.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-0 என மெத்வதேவ் முன்னிலை பெற்ற நிலையில், மியோமிர் காயத்தால் விலகினார். இதனால் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.