< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
|7 Jun 2023 9:54 PM IST
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், கோகோ காஃபுடன் மோதினார்.
பாரீஸ்,
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கோகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவுடன் மோதுகிறார்.