< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி கண்ட ஹோல்கர் ரூனே

image courtesy: AFP

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி கண்ட ஹோல்கர் ரூனே

தினத்தந்தி
|
29 May 2024 10:06 AM IST

டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, இங்கிலாந்தின் டான் எவன்ஸ் உடன் மோதினார்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, இங்கிலாந்தின் டான் எவன்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஹோல்கர் ரூனே 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் டான் எவன்ஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்