< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்
|2 Jun 2024 2:32 PM IST
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய கேஸ்பர் ரூட், 2வது செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது மற்றும் 4வது செட்களில் கேஸ்பர் ரூட் 6-2, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் கேஸ்பர் ரூட் 6-4, 1-6, 6-2, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.