< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறிய போபண்ணா இணை
|3 Jun 2024 7:06 PM IST
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா இணை, இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி - ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஆண்ட்ரியா வவசோரி - லியுட்மிலா சாம்சோனோவா இணை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரோகன் போபண்ணா இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.