< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், சிட்சிபாஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்
|3 Jun 2024 1:54 AM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் அல்காரசும், சிட்சிபாசும் மோதுகின்றனர்.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), அலியாசிம்முடன் (கனடா) மோதினார்.
இந்த போட்டியில் அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் அலியாசிம்மை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 7-6 (7-4), 6-2, 6-2 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை வெளியேற்றினார். கால்இறுதியில் அல்காரசும், சிட்சிபாசும் கோதாவில் இறங்குகிறார்கள்.