< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|5 Jun 2024 8:33 PM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அல்காரஸ் முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.