< Back
டென்னிஸ்
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது
டென்னிஸ்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது

Gokul Raj B
|
16 July 2022 6:32 AM IST

முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

மாஸ்கோ,

ரஷியாவின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கணவர் கில்கெஸ் மற்றும் பிறந்து 2 வாரங்களான குழந்தை தியோடர் ஆகியோரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்