பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்
|பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
லண்டன்,
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார்.
அதன்படி பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். லண்டனில் இன்று நடைபெறும் லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடுகிறார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது.
உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.