< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி
|28 Jun 2024 7:33 PM IST
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடா வீராங்கனை லைலா ஆன்னி பெர்னாண்டசுடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்ட மேடிசன் கீஸ் 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது செட்டில் கனடா வீராங்கனை லைலா ஆன்னி பெர்னாண்டஸ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் 3-6, 6-3, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.