< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: கிவிடோவா 'சாம்பியன்'
|26 Jun 2022 4:37 AM IST
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
லண்டன்,
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) வீழ்த்தி மகுடம் சூடினார். அவருக்கு ரூ.91 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
தரவரிசையில் 31-வது இடம் வகிக்கும் பெட்ரோவா ருசித்த 29-வது பட்டம் இதுவாகும். விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த வெற்றி கிவிடோவாவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.