< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மேக்ஸ் பர்செல்
|29 Jun 2024 1:40 PM IST
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல், யுனைடெட் கிங்டத்தின் பில்லி ஹாரிஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மேக்ஸ் பர்செல் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் யுனைடெட் கிங்டத்தின் பில்லி ஹாரிஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மேக்ஸ் பர்செல் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.