< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் : அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|28 Jun 2024 4:17 PM IST
காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், சீனாவைச் சேர்ந்த ஷாங் ஜங்செங்குடன் மோதினார்.
லண்டன்,
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், சீனாவைச் சேர்ந்த ஷாங் ஜங்செங்குடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரிட்ஸ் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகியுடன் பிரிட்ஸ் மோதுகிறார்.