< Back
டென்னிஸ்
டென்னிஸ்
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரூப்லெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் பப்ளிக்
|2 March 2024 1:35 AM IST
இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக், யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.
துபாய்,
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றார். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவை வீழ்த்தினார்.
இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக், யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.