< Back
டென்னிஸ்
டென்னிஸ்
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
|29 Feb 2024 5:13 PM IST
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.
துபாய்,
துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஹம்பர்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆண்டி முர்ரே துபாய் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.