< Back
டென்னிஸ்
டென்னிஸ்
துபாய் டென்னிஸ்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி
|29 Feb 2024 8:55 AM IST
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
துபாய்,
துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 7-6 , 7-6 என்ற நேர்செட்டில் சிகந்தர் மன்சூரி (துனிசியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இதே போல் யுகி பாம்ப்ரி (இந்தியா)- ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) கூட்டணி 6-7 , 6-3, 10-8 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் புப்லிக் (கஜகஸ்தான்)- அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) இணையை சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தது.
ஒற்றையர் பிரிவில் 'வைல்டு கார்டு' சலுகை பெற்றிருந்த இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் 4-6, 7-5, 1-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லோரின்சோ சோங்கோவிடம் தோற்று வெளியேறினார்.