< Back
டென்னிஸ்
டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 'சாம்பியன்'
|5 March 2023 1:07 AM IST
சாம்பியன் பட்டம் வென்ற மெட்விடேவுக்கு 500 தரவரிசை புள்ளியுடன் ரூ.4.36 கோடி பரிசாக கிடைத்தது.
துபாய்,
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 18-வது பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் வென்ற மெட்விடேவுக்கு 500 தரவரிசை புள்ளியுடன் ரூ.4.36 கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற ரூப்லெவுக்கு ரூ.2.34 கோடி கிட்டியது.