< Back
டென்னிஸ்
டென்னிஸ்
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் : காலிறுதியில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி
|1 March 2024 6:37 AM IST
ரோகன் போபண்ணா ஜோடி- செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது.
துபாய்,
துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி- செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் போபண்ணா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.