< Back
டென்னிஸ்
பந்து எடுக்கும் பணிப்பெண் மீது பந்தை அடித்த பிரெஞ்சு  ஒபன்-பெண் இரட்டையர் அணி தகுதி நீக்கம்
டென்னிஸ்

பந்து எடுக்கும் பணிப்பெண் மீது பந்தை அடித்த பிரெஞ்சு ஒபன்-பெண் இரட்டையர் அணி தகுதி நீக்கம்

தினத்தந்தி
|
5 Jun 2023 5:30 PM IST

பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் ஆட்டம் சர்ச்சைக்குரிய வகையில் முடிவடைந்தது, மியு கட்டோ மற்றும் அல்டிலா சுட்ஜியாடி இரட்டையர் அணி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

பிரெஞ்ச் ஓபன்,

பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் -டார்மோ மற்றும் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா ஜோடி

ஜப்பானின் கேட்டோ மற்றும் இந்தோனேசியாவின் சுட்ஜியாடி மோதியது. இதில் முதல் செட்டை சாரா சொரிப்ஸ் ஜோடி கைப்பால் எடுக்கும் ம்பற்றி இருந்தது

இரண்டாவது செட்டில் ஜப்பானின் கேட்டோ ஜோடி 3-1 என முன்னிலை வகித்தனர். அப்போது அபோது கேட்டோ அடித்த பந்து பால் எடுக்கும் பணிப் பெண்ணின் தலையில் பட்டது. இதில் அப்பெண் நிலை குழைந்தார். இது சர்ச்சையாக மாறியது. கேட்டா பந்தை வேண்டுமென்றே பணிப் பெண்ணை அடிக்க நினைத்ததாகத் தெரியவில்லை என்றாலும், பந்து அவர் தலையைத் தாக்கியது. மைதானத்தின் பின்புறம் நின்று பணிப் பெண் கண் கலங்கினார்.

கிராண்ட்ஸ்லாம் மேற்பார்வையாளர் வெய்ன் மெக்கெவன் மற்றும் போட்டி நடுவர் ரெமி அஸெமர் ஆகியோர் மைதானத்திற்குள் வருவதற்கு முன், தலைமை நடுவர் அலெக்ஸாண்ட்ரே ஜூஜ் இதனை விதி மீறல் என கூறினார். அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இடையேயான விவாதங்களுக்குப் பிறகு, கேட்டோ மற்றும் சுட்ஜியாடி ஜோடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்த நிகழ்வு முதல் முறை அல்ல ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் நோவக் ஜோகோவிச்சின் யுஎஸ் ஓபன் ஆட்டத்தின் போது வேண்டுமென்றே ஒரு லைன் நடுவரைத் தாக்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்து உள்ளது..

கிராண்ட் ஸ்லாம் விதிப்படி, வீரர்கள் "போட்டியின் போது டென்னிஸ் பந்தை வன்முறையாகவோ, ஆபத்தாகவோ அல்லது கோபத்துடன் அடிக்கவோ, உதைக்கவோ அல்லது வீசவோ கூடாது. மேலும் இது குறித்து நடுவரின் முடிவு இறுதியானது மற்றும் மேல்முறையீடு செய்ய முடியாதது" என கூறப்படுகிறது.

மேலும் தகுதி செய்யப்பட்ட அணி அல்லது வீரர் போட்டியில் பெற்ற தரவரிசைப் புள்ளிகளையும், மற்றும் அனைத்து பரிசுத் தொகையையும் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்