< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஜோகோவிச் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
|10 Oct 2022 5:24 AM IST
ஜோகோவிச் இதுவரை வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது.
அஸ்தானா,
அஸ்தானா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) சாய்த்து கோப்பையை கைப்பற்றினார். இந்த ஆண்டில் ஜோகோவிச்சுக்கு இது 4-வது மகுடமாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது.
அதிகம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள 35 வயதான ஜோகோவிச் கூறுகையில், 'எனது டென்னிஸ் வாழ்க்கை நன்றாக அமையும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. ஆனால் இத்தனை தடவை இறுதிசுற்றுக்கு செல்வேன். இத்தனை பட்டங்களை வெல்வேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. எனது விளையாட்டில் உயரிய நிலையை அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது' என்றார்.