< Back
டென்னிஸ்
டென்னிஸ்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் லக்ஷயா சென் வெற்றி
|20 Oct 2022 3:34 AM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடக்க சுற்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
ஒடென்சி,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-16, 21-12 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 22-20 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை விரட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 17-21, 21-19, 11-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் யி மேனிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.