டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு - யூகி பாம்ப்ரி விலகல்
|இந்த போட்டி தொடரில் இருந்து முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி விலகி உள்ளார்.
புதுடெல்லி,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 சுற்றில் இந்தியா - சுவீடன் அணிகள் அடுத்த மாதம் 14, 15ம் தேதிகளில் மோத உள்ளன. இந்த தொடர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடரில் இருந்து முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி விலகி உள்ளார். அதேசமயம், சுமித் நாகல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் தேசிய சாம்பியன் அசுதோஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி, நிகி பொன்சா, சித்தார்த் விஸ்வகர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரராக ஆர்யன் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி விவரம்:-
சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி, நிகி பொன்சா, சித்தார்த் விஸ்வகர்மா.
மாற்று வீரர்: - ஆர்யன் ஷா
கேப்டன்:- ரோகித் ராஜ்பால்.