< Back
டென்னிஸ்
டென்னிஸ்
குரோஷியா ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
|25 July 2024 6:43 PM IST
யூகி பாம்ப்ரி - அல்பானோ ஜோடி, மானுவல் கினார்டு - கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது
ஜாக்ரெப்,
குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு - கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.
முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோஷியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.