< Back
டென்னிஸ்
டென்னிஸ்
குரோஷியா ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
|30 July 2023 10:43 AM IST
அரையிறுதி சுற்றில் லாரென்சோ சோனேகோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
உமாங்,
33-வது குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடர் உமாங் நகரில் நடைபெற்று வருகிறது. தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்த அரையிறுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா இத்தாலியைச் சேர்ந்த லாரென்சோ சோனேகோ உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸி பாபிரின் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். வாவ்ரிங்கா 4 ஆண்டுகளுக்கு பின் ஏடிபி தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.