< Back
டென்னிஸ்
குரோஷியா ஓபன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy; AFP

டென்னிஸ்

குரோஷியா ஓபன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 July 2023 12:49 PM IST

2-வது சுற்று போட்டியில் டொமினிக் தீமை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

உமாங்,

33-வது குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடர் உமாங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. இதில் நடந்த 2-வது சுற்று போட்டியில் செக் குடியரசை சேர்ந்த ஜிரி லெஹெக்கா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டொமினிக் தீம் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஜிரி லெஹெக்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இவரது வெற்றி புள்ளிகளில் 82 சதவீதம் சர்வீஸ் முறைகளிலேயே கிடைத்தது. அவர் காலிறுதியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ அர்னால்டி உடன் மோத உள்ளார்

இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா பெடரிகோ கோரியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் செய்திகள்