< Back
டென்னிஸ்
டென்னிஸ்
குரோஷியா ஓபன் டென்னிஸ்: அலெக்ஸி பாபிரின் சாம்பியன்..!!
|31 July 2023 11:21 AM IST
இறுதி போட்டியில் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி அலெக்ஸி பாபிரின் சாம்பியன் பட்டம் வென்றார்
உமாங்,
33-வது குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடர் உமாங் நகரில் நடைபெற்று வந்தது. இதில் நடந்த இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வாவ்ரிங்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸி பாபிரின் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை வாவ்ரிங்கா கைப்பற்றினார். பின்னர் எழுச்சி பெற்ற பாபிரின் கடைசி இரண்டு செட்டுகளை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். 2 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பாபிரின் 6-7, 6-3 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மேலும் இந்த போட்டியின் முக்கியமான தருணத்தில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் விளையாடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.