< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன்; முதல் சுற்றில் டாமி பால் அதிர்ச்சி தோல்வி
|14 Aug 2024 4:57 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சின்சினாட்டி,
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டாமி பால், இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிளேவியோ கோபோலி 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தினார். அதிர்ச்சி தோல்வி கண்ட டாமி பால் முதல் சுற்றுடன் வெளியேறினார்.