சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி
|வெரோனிகா குடர்மெடோவாவை வீழ்த்தி வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ், ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோ உடன் மோதினார். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இருவரும் சரிசம பலத்துடன் விளையாடினர்.
முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீனஸ் கைப்பற்றி அசத்தினார். பின்னர் நடந்த 2-வது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. அதனை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். 2 மணி நேரங்கள் நடந்த இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.