< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
17 Aug 2023 2:12 AM IST

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 55-ம் நிலை வீரரான ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 2 நிமிடம் நீடித்தது. இந்த ஆண்டில் சர்வதேச போட்டியில் அல்காரஸ் ருசித்த 50-வது வெற்றி இதுவாகும்.

மற்ற ஆட்டங்களில் பின்லாந்து வீரர் எமில் ரூசுவோரி 7-6 (12-10), 5-7, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஆந்த்ரே ரூப்லெவுக்கும் (ரஷியா), பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னரினோ 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்க்கும் (கனடா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றை எட்டினர்.

மேலும் செய்திகள்