< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா

தினத்தந்தி
|
18 Aug 2024 11:30 PM IST

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.

சின்சினாட்டி,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்