< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
|18 Aug 2024 1:15 AM IST
சபலென்கா அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றின் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, ரஷியாவை சேர்ந்த லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.