< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
|17 Aug 2024 2:32 AM IST
சபலென்கா காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-5 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.