< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி

Image Courtesy: AFP

டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
19 Aug 2022 11:55 PM IST

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு மேடிசன் கீஸ் தகுதி பெற்றுள்ளார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் மற்றும் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா ஆகியோர் மோதினார்.

இந்த போட்டியில் மேடிசன் கீஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்ற காலிறுதி போட்டிகள் இன்னும் நடைபெற இருப்பதால் அதன் பிறகே அரையிறுதியில் மேடிசன் கீஸ் யாரை எதிர்கொள்வார் என்பது முடிவாகும்.

மேலும் செய்திகள்