< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெர் சாம்பியன்
|20 Aug 2024 5:53 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
சின்சினாட்டி,
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.