சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா இணை தோல்வி
|சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் - சிலியின் நிக்கோலஸ் ஜாரி இணை உடன் மோதியது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஆர்தர் பில்ஸ் இணையும், 2வது செட்டை 7-6, (7-5) என்ற புள்ளிக்கணக்கில் போபண்ணா இணையும் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட ஆர்தர் பில்ஸ் இணை 10-8 என்ற புள்ளிக்கணக்கில் போபண்ணா இணையை வீழ்த்தியது.
இதன் மூலம் போபண்ணா இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.