< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்சியா சாம்பியன்..!

image courtesy: Western & Southern Open twitter

டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்சியா சாம்பியன்..!

தினத்தந்தி
|
22 Aug 2022 5:58 PM IST

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா வெற்றி வாகை சூடினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கரோலின் கார்சியா, செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்சியா, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுலபமாக கிவிட்டோவாவை தோற்கடித்து, சின்சினாட்டி பட்டத்தை வென்றார்.

மேலும் செய்திகள்