< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சிட்சிபாஸ், கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP 

டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சிட்சிபாஸ், கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
16 Aug 2024 4:45 PM IST

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க முன்னணி வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதன் மூலம் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிட்சிபாஸ் 2வது மற்றும் 3வது செட்களை முறையே 4-6, 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

இதன் மூலம் ஜாக் டிராப்பர் 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கோகோ காப் 4-6, 6-2, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்