< Back
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
17 Aug 2024 6:00 AM IST

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்றின் ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கெயில் மான்பில்ஸ் (பிரான்ஸ்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் அல்காரஸ் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றவாறே முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அதன்பின் எழுச்சி பெற்ற மான்பில்ஸ் அடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். முடிவில் மான்பில்ஸ் 4-6, 7-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் அல்காரசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் அல்காரஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்