< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன்; தகுதி சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்
|14 Aug 2024 12:53 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சின்சினாட்டி,
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கன்சி மெக்டொனால்ட் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதன் மூலம் சுமித்நாகல் தகுதிச்சுற்றிலேயே தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.