< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
|28 Sept 2024 5:58 PM IST
இவர் காலிறுதியில் ஜானிக் சினெர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பீஜிங்,
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜிரி லெஹெக்கா (செக்), ராபர்டோ பாட்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை பறிகொடுத்த ஜிரி லெஹெக்கா, அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். லெஹெக்கா இந்த ஆட்டத்தில் 3-6, 6-2 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இவர் காலிறுதியில் ஜானிக் சினெர் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.