< Back
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP 

டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 Sept 2024 4:41 PM IST

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), ரஷியாவின் ரோமன் சபியுலினை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சின்னெர் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் சின்னெர் 3-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் ரோமன் சபியுலினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்