< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன்
|7 Oct 2024 6:38 AM IST
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
பீஜிங்,
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 6-ம்நிலை வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), தரவரிசையில் 49-வது இடத்தில் உள்ள கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் வென்ற 8-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.