< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
|2 Oct 2024 4:42 PM IST
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது.
பீஜிங்,
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோத உள்ளார்.