< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|28 Sept 2024 2:55 PM IST
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
பீஜிங்,
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), தாய்லாந்தின் மனஞ்சயா சவாங்கேவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 6-4, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தின் மனஞ்சயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 32) முன்னேறினார்.