< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
3 Sept 2022 8:44 AM IST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.

சென்னை,

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) உள்பட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை இன்று (சனிக்கிழமை) ஆன்லைனில் தொடங்குகிறது.

போட்டி நடக்கும் 7 நாட்களுக்குரிய சீசன் டிக்கெட் ரூ.850, ரூ.1,700, ரூ.2,550 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. chennaiopenwta.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்