< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-மைனெனி ஜோடி சாம்பியன்
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-மைனெனி ஜோடி 'சாம்பியன்'

தினத்தந்தி
|
11 Feb 2024 3:20 AM IST

வெற்றி பெற்ற ராம்குமார்-மைனெனி கூட்டணிக்கு ரூ.6¼ லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ராம்குமார்-சகெத் மைனெனி ஜோடி சரிவில் இருந்து மீண்டு 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான ரித்விக் சவுத்ரி போலிபள்ளி-நிக்கி பூனச்சா இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற ராம்குமார்-மைனெனி கூட்டணிக்கு ரூ.6¼ லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக நடந்த ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டாலிபோர் ஸ்வர்சினாவை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் இத்தாலி வீரர் லூகா நார்டி 6-4, 4-6, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சுன் ஹின்னை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் நீடித்தது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சுமித் நாகல்-லூகா நார்டி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்