< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ்: 17 வயது வீராங்கனை அசத்தல்
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: 17 வயது வீராங்கனை அசத்தல்

தினத்தந்தி
|
15 Sept 2022 6:18 AM IST

17 வயதான லின்டா புருவிர்தோவா 6-4, 6-2 ன்ற நேர் செட்டில் ரெபக்கா பீட்டர்சனை வீழ்த்தி அசத்தினார்.

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், தரவரிசையில் 130-ம் நிலை வீராங்கனையான 17 வயது செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா, 95-வது இடத்தில் உள்ள ரெபக்கா பீட்டர்சனுடன்(சுவீடன்) மோதினார்.

இந்த ஆட்டத்தில் லின்டா புருவிர்தோவா 6-4, 6-2 ன்ற நேர் செட்டில் ரெபக்கா பீட்டர்சனை வீழ்த்தி அசத்தினார். இதே போல் தகுதி நிலை வீராங்கனையான ஜப்பானின் நாவ் ஹிபினோ 6-2, 6-3 என்ற நேர் செட்டில் குவாங் வாங்கை (சீனா) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்