< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
|18 Feb 2023 4:10 PM IST
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், இங்கிலாந்து வீரர் ஜாய் கிளார்க்கை 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மொரீனோ டி ஆல்பர்ன் உடன் சுமித் நாகல் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி அமெரிக்க வீரர் மொரீனோ வெற்றி பெற்றார். இதன் மூலம் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் சுமித் நாகல் வெளியேறியுள்ளார்.