< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; மரியா சக்காரி அரையிறுதிக்கு முன்னேற்றம்
|6 April 2024 1:42 PM IST
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மரியா சக்காரி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மரியா சக்காரி அரையிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்கொள்கிறார்.